திலீப் மற்றும் சித்தார்த் நடித்து வெளியாகியுள்ள கம்மார சம்பவம் திரைப்படத்தைப் பார்த்தேன். முதல் பாகம் என்னை வெகுவாக ஈர்த்தது. திலீப்பின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.
இரண்டாம் பாகம் தமிழ் கமர்சியல் சினிமாவை கிண்டல் செய்கிறோம் என்று சொன்ன கதையை திரும்ப வேறுவடிவில் சொல்லப்பட்டது எனக்கு திருப்தியாக இல்லை. படம் வேறு மிக மிக நீளம். ஆனால் திரையரங்கில் சிரிப்பலைகள் கேட்டவண்ணம் இருந்தது. தமிழ் கமர்சியல் ஹீரோக்களையும், தமிழ் கமர்சியல் சினிமா இயக்குநர்களையும் தமிழக அரசியலையும் பகடி செய்து பறக்கவிட்டு விட்டுள்ளார்கள். அதைத்தாண்டி வரலாறு இப்படி தான் திரிக்கப்படுகிறது என்பதைத்தான் படத்தின் இறுதியில் சொல்ல வருகிறார்கள்.
ஒரு மலையாள சினிமா எப்படி எடுக்கப்படுகிறது அதை நாம் தமிழில் மறுஆக்கம் செய்யும் போது தமிழுக்காக எப்படி திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சண்டைக்காட்சி அமைக்கப்பட்டு, நடனம் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது என்பதை விலாவாரியாக நைய்யாண்டியுடன் விளக்கியிருக்கிறார்கள். அதன் அரசியலை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆயினும் வருத்தமாக இருக்கிறது
Comments