top of page

விஞ்ஞான புரட்சி


நேற்று சாதாரண மனிதனுக்கு ஒரு குற்றம் இழைக்கப்பட்டால் அவன் எதிரியின் அதிகாரத்தை தாண்டி குரலை உயர்த்தி நீதி கிடைக்க காவல் நிலையம் செல்ல வேண்டும்.அங்கு நீதி கிடைக்கா விட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டும்,அதற்கு ஒரு ஏழையின் பொருளாதார சூழல் இடம் தராது,காவல் நிலையத்திலேயே அவன் குரல் ஒடுக்கப்பட்டு விடும்.நீதி மன்றத்தில் அதிகாரமுள்ள எதிரி எளிதில் தப்பிவிடுவான். இதைத்தாண்டி ஏழைக்கு அநீதி இழைக்கப்பட்டால் ஒரு கதாநாயகன் வரவேண்டும். அவன் சண்டையிட்டு மண்டை உடைத்து சாவான். அல்லது அதிகாரத்தால் கொல்லப்படுவான்.

இன்று அந்த கதாநாயகன் மனிதனாக இருக்கவேண்டியதில்லை ஹீரோக்கள் செய்வதை மிக எளிதாக ஆண்டிராய்டு செல்போனின் கால் ரெக்கார்ட்டர் ஆப் செய்துவிடுகிறது. அதை பேஸ்புக்கில் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு விட்டால் போதும் ஏழைக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனே உலக மனிதனின் கண்களுக்கு தெரிந்து விடுகிறது. விஞ்ஞான புரட்சி இன்று கடவுளின் செங்கோலாக செல்போன் பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் வடிவில் வந்து விட்டது.

தவறாக வழி நடத்தும் பேராசிரியைக்கு எதிராக அருப்புக்கோட்டை மாணவிகளின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

நேற்றைப்போல ஒற்றை சிலம்போடு பாண்டியனின் அவையில் கண்ணகி போல அவயக்குரல் எழுப்ப தேவையில்லை. ஒரு ஆண்ட்ராய்டு போன் போதும் புரட்சியை துவக்க... நீதி வெல்லட்டும்

பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்கத் துவங்கி விட்டார்கள். யாரையும் நம்பாமல் மக்கள் மன்றத்தில் நின்று நீதி கேட்கிறார்கள்.

பத்திரிகை,தொலைக்காட்சி என்று நேற்றை போல நாம் எதையும் நம்பத்தேவையில்லை. கட்சி சாராத அரசியல் சாராத மதம் சாராத நாடு சாராத ஒரு மக்கள் நீதி மய்யமாக பேஸ்புக்கும் வாட்ஸ் அப்பும் வந்து விட்டது. இனி மக்களின் குரல்கள் ஆங்காரமாய் நீதி வேண்டி ஒலிக்கத்துவங்கும், சாதாரண மனிதனுக்கு நீதி கிடைப்பது மிக அரிதான காலத்தில் அவனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு எதிராக அவன் குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியிருப்பது ஆறுதலாக இருக்கிறது. இதை சாத்தியப்படுத்திய விஞ்ஞானத்திற்கு நன்றி

15 views0 comments

Recent Posts

See All
bottom of page