பத்திரிகை அறம்கள்ளக்காதல் கள்ள உறவு சம்மந்தமான கொலைகள், அதனால் ஏற்படும் தற்கொலைகள் அந்த காதல் எப்படி ஏற்பட்டது? அவர்களின் முதல் சந்திப்பு எது ? அந்த காதல் எப்படி நெருக்கமானது இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யமான கதைகள், அழுக்கடைந்த நபரின் அபலிஷைகள், அவர்களின் வாட்ஸ்அப் வீடியோக்கள் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு இப்படி நோய்மையான செய்திகளை சில பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்து முதல் இரண்டாம் பக்கங்களில் வெளியிடுவது. அவை தொலைக்காட்சியில் விவாதிக்கப்படுவது. உண்மையில் மிக ஆபாசமாக ஆயாசமாக உள்ளது. வெளியிட செய்திகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. பொதுமனநிலையை இன்னும் சிக்கலாக்குகிற வேலை தொடர்ந்து செய்வது வாசகர்களின் மனநிலையை பாதிக்கிறது. இந்த பாதிப்பை நீங்கள் உடனடியாக உணர முடியாது. ஞாபக அடுக்குகளில் அறியாத பதிந்த நினைவுகள் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எதை செய்தியாக்கக்கூடாது எந்த செய்திக்கு முன்னுரிமை தரக்கூடாது என்று முடிவு செய்தால் சமூகத்தின் மதிப்பீடுகள் மாறக்கூடும். தோனியும்,டெண்டுல்கரும் நம் கதாநாயகனாக வந்திருக்க முடியாது. ஈசல் புகழ் பெறும் நபர்களை முன்னிலைப்படுத்துவதைத்தவிர்த்து அழியாப்புகழ் பெறுபவர்களை முன்னிலைப்படுத்துதல் அறம் சார்ந்த மனிதனின் நடவடிக்கைகளை சமூகம் பின்பற்றத்துவங்கும். அறம் சார்ந்த ஒருவரை மேலும் மேலும் பல்வேறு செய்திகளின், கதைகளின் மூலம் அவரின் கதாநாயகப்பிம்பத்தை வலிமையாக நிறுவுதல் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நாம் கட்டி எழுப்பமுடியும். ஆனந்த விகடனில் வரும் வேள்பாரியை வாசிக்கும் வாசகர்களின் மனதில் பழந்தமிழரின் வாழக்கை அப்படி ஆழமாக பதிந்துள்ளது. இதை ஒரு பத்திரிகை செய்ய முடியும் எனில் நோய்மைக்கூறுகளை தவிர்க்கவும் முடியும்.

120 views

© 2018 by DirectorVasanthaBalan.com