top of page
Writer's pictureVasantha Balan

மேலாண்மை பொன்னுச்சாமி

நேற்று எழுத்தாளர்

மறைந்து விட்டார். அவர்களின் ஆன்மா கரிசல் காடுகளில் ஒரு காற்றை போல ஒரு வெயிலை போல இடையறாது அலைந்து கொண்டிருக்கும்.

மேலாண்மை பொன்னுசாமியின் எழுத்துக்கள் கரிசல் வாழ்க்கையின் ஒரு குருத்தை வாசகர்களுக்கு வழங்கிய எழுத்துக்கள்.சிவகாசி விருதுநகர் சுற்றுப்புற மனிதர்களின் வாழ்க்கையை தன் எழுத்தில் இடையறாது பதிவு செய்தவர்.

என் முதல் திரைப்படம் ஆல்பம் வெளியானபோது அதை கடுமையாக விமர்சித்து மேலாண்மை அவர்கள் எழுதியிருந்தார்.ஏனெனில் அதில் கம்யூனிசத்தை கைவிட்ட ஒருவனின் வாழ்க்கை பதிவாகியிருக்கும்.அது முக்கியமாக கம்யூனிச தோழர்களை தொந்தரவு படுத்தியது என்பது உண்மை.

விருதுநகர் சென்றிருந்த போது மேலாண்மறைநாடு சென்று எழுத்தாளர் பொன்னுசாமி அவர்களை சந்தித்தேன்.நாள் முழுக்க உரையாடியபடியிருந்தேன். மதியம் நாட்டுக்கோழி குழம்புடன் சாப்பாடு.மாலை கிளம்பினேன்.அன்று அந்த அன்பான,கனிவான விருந்தோம்பலை என்றும் மறவேன்.

மண்ணோடும் மண்ணின் மனிதர்களுடனும் வாழும் ஆன்மா.கரிசல் காட்டின் காற்றை போல அலைந்து கொண்டிருக்கும்உங்கள் எழுத்தின் சுவையை அறிந்த வாசகர்களில் நானும் ஒருவன். ஐயா உங்களுக்கு என் வணக்கங்கள்.

24 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page