புதிய விடியல்


கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கும் சாதாரண பார்வையாளனாய் தமிழகத்தில் குவிந்து கிடக்கும் பிரச்சினைகளான ஸ்டெர்லைட், மீத்தேன், கூடங்குளம், காவிரி பிரச்சினை, கதிராமங்கலம் பிரச்சினை, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம். நீட். விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் டெல்லியில் நடந்த விவசாயிகளின் நிர்வாண போராட்டம் ஆதிச்சநல்லூர் ஆய்வு மூடப்பட்ட விவகாரம், என பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். அதற்கு போராடிக்கொண்டும் இருக்கிறோம், இந்த போராட்டத்தில் மக்களின் தன்னெழுச்சியை பார்க்கிறேன். மெரினா புரட்சியைப் பார்த்து அதிசயித்தேன். இதில் ஆதாயம் தேடத்துடிக்கும் கட்சிகளின் நிலையையும் பார்க்கிறேன்.

ஆனால் டிராபிக் ராமசாமி துவங்கி மே 17 இயக்கத்தினர், பூவுலகின் நண்பர்கள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள், தமிழர் கலைஇலக்கிய பண்பாட்டு பேரவை, சகாயம் தலைமையிலான குழு, உதயக்குமார் போன்றோர்கள் நிஜமான களப்போராளிகளாக களத்தில் நிற்பதையும் சிறை செல்வதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவர்கள் அனைவரும் அணி திரண்டு ஒன்றாக போராடினால் புதிய விடியல் பிறக்கும். தத்துவங்களால் நீங்கள் பிரிந்து நிற்கலாம். ஆனால் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு வரிசைக்கட்டி நிற்கும் பிரச்சினைகளையும் மனதில் கொண்டு ஒரு அணியாக ஒன்றிணைந்து போராடினால் தமிழகத்திற்கு ஒரு விடியல் ஏற்படக்கூடும்.

© 2018 by DirectorVasanthaBalan.com