ஜென்டில்மேன்ஜென்டில்மேன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 1992ம் ஆண்டு தி நகரில் முன்பு இருந்த அம்பிகா ஜூவல்லரியில் நடந்தது.அது பிரின்ஸ்பிளாஸாவில் திருடப்போகும் அர்ஜீன் கவுண்டமணி சம்மந்தப்பட்ட காட்சி. எனக்கு திரைப்படத்தில் நடிக்க பெரிய விருப்பம் கிடையாது.இருப்பினும் இணை இயக்குநர் வெங்கடேஷ் அவர்கள் நகைக்கடையில் மோர் கொடுக்கும் பையனாக பாலன் நடிக்கட்டும் என்று மாட்டிவிட்டார். சார் மோர் ! என்று நான் சொல்ல கவுண்டமணி என் முகத்தை தள்ளிவிட்டு நோ மோர்! என்கிற இந்த காட்சி.

படம் வெளியாகும் போது திரையில் உதவி இயக்குநராய் என் பெயரை என் உறவினர்கள் பார்த்து பெருமிதப்பட்டதைத்தாண்டி நடித்ததை சொல்லி சந்தோசப்பட்டார்கள்.என் அம்மாவும் ஆச்சியும் என் முகத்தை பார்ப்பதற்காகவே ஜென்டில்மேன் திரைப்படத்தை இருமுறை பார்த்தார்கள்.அப்போது பைரஸிலாம் இல்லை. எதுக்குடா இந்த சின்ன ரோல்ல நடிச்ச அந்த கிளைமாக்ஸ்ல ஒரு பையன் வருவானே அந்த ரோல்ல நடிச்சியிருக்கலாம்ல என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது. இன்றும் நடிப்பது சம்மந்தமாக பெரிய விருப்பம் இல்லை. நடிக்க விரும்பாவிட்டாலும் நம் இளமைக்காலத்தோற்றத்தை மீண்டும் காண்பது ஒரு மகிழ்ச்சியே

79 views

© 2018 by DirectorVasanthaBalan.com